அமெரிக்காவின் 1,454 அடி உயரத்தைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விடவும் பெரிய விண்கல் ஒன்று அடுத்தவாரம் பூமியை கடந்த செல்லவுள்ளதாக நாசா விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர்.

1,870 அடி விட்டத்தைக் கொண்ட "2006 QQ23" என்ற விண்கல் ஒன்றே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லவுள்ளது.

தற்போது பூமியில் இருந்து சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அது உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.