முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு அமை­வாக செயற்­ப­டு­கின்றார். அதற்­காக அவரை ஒதுக்கிச் செயற்­படும் நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்­சியும் இல்லை. எனவே பேச்­சு­வார்த்தை ஊடாக அவ­ரது பிரச்­சி­னையை அணுகி அதற்­கான தீர்­வொன்றை எட்­டவே நாம் முயற்­சிக்­கின்றோம் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் போலி­யா­னதும் மெய்­யா­ன­து­மான பல பிர­சா­ரங்கள் எழுந்­துள்­ளன. கடந்த காலங்­க­ளிலும் இவ்­வா­றான நில­லைக்கு கட்சி தள்­ளப்­பட்­டது. எமக்­குள்ள மக்கள் பலத்தை கொண்டு கட்­சியை மீட்­டுள்ளோம். அதனால் எமது நாட்டின் பல­மிக்க கட்­சி­களில் ஒன்­றாக சுதந்­திர கட்­சியை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டுள்ளோம்.

மக்­க­ளி­டத்­திலும் சுதந்­திர கட­சியின் நிலைப்­பாடு தொடர்பில் சந்­தே­க­மான நிலை ஏற­பட்­டி­ருக்க கூடும். ஆனால் சுதந்­திர கட்­சியின் மேதின கூட்­டத்­தினை பார்த்த பின்னர் மக்­க­ளி­டத்தில் புது நம்­பிக்ளை பிறந்­துள்­ளது. அதே­போன்று கிரு­லப்­ப­னைக்கும் கூட்டம் சென்­றது என்­பதை நாம் மறுக்­க­வில்லை. சுதந்­திர கட்­சியில் பிள­வுகள் மற்றும் வேறு­பட்ட கருத்­துக்கள் இருந்­தது உண்மை.

அதனால் நாம் முற்­று­மு­ழு­தாக வேறு­பட்டு சென்­று­வி­ட­வில்லை. மேதி­னத்தின் போது மக்­களும் எமக்­கான முழு ஆத­ரவை வழங்கும் வகையில் பெருந்­தி­ர­ளாக கூடி­யி­ருந்­தனர். கட்­சியில் பிளவை ஏற்­டுத்த நினைத்­த­வர்­களும் தற்­போது கட்­சியை ஒன்­று­ப­டுத்த முற்­ப­டு­கின்­றனர் அதுவே எமது மேதின வெற்­றி­யா­கவும் அமைந்­துள்­ளது.

ஆனால் தற்­போதும் வேறு­பட்ட கருத்­துக்கள் எண்­ணங்கள் உள்­ளன. அவற்­றினால் கட்சி பிள­வு­பட்டுச் சென்­று­விடும் என்று இனி எவரும் எதிர்­பார்க்க வேண்டாம். எமது கட்­சியில் மட்­டு­மல்ல எந்த கட்­சியி லும் பணிப்போர் இடை­யி­டையே நிகழ்­வதை தடுக்க முடி­யாது. அதனால் அவற்றை குறைத்து கட்­சியின் தேர்தல் வெற்­றியை நோக்­காக கொண்டு சகல உறுப்­பி­னர்­களும் செயற்­பட வேண்டும்.

மக்­களும் அத­னையே எதிர்­பார்க்­கின்­றனர். அதனால் சேறு பூசல்கள் போன்ற செயற்­பா­டு­களை விடுத்து கட்சி உறுப்­பி­னர்கள் செயற்­பட வேண்டும். அவ்­வாறு செயற்­பட்டால் மாத்­தி­ரமே நாம் சுத­நத்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்தும் சதி­யி­லி­ருந்து விடு­பட முடியும்.

இவ்­வா­றி­ருக்­கையில் முன்னால் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் தனது தனிப்­பட்ட கொள்­கைக்கு அமை­வான செயற்­பா­டு­களை முன்னெடுத்து வருகின்றார். அதனால் அவரை வேறுபடுத்தி நாம் செயற்படபோவதில்லை. அவருடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமே களைய வேண்டும் . அவரை வேறு தரப்பாக பார்க்கும் பட்சத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாது என்றார்.