கோத்தாவுடன் மைத்திரி தொலைபேசியில் பேச்சு - விரைவில் நேரில் சந்திப்பு

By Daya

03 Aug, 2019 | 03:32 PM
image

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், அவருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார். 

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த உரையாடலில் இருவரும் சில விடயங்களை மனம்விட்டுப் பேசியுள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடையில் இன்னும் சில தினங்களில் நேரடிச் சந்திப்பு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கோத்தபாய சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவருடன் தொலைபேசியில் ஜனாதிபதி மைத்திரிபால உரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right