புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது மாணவியின் தாயார், சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக சந்தேக நபர்களின் உறவினர்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக மன்றுக்கு தெரியப்படுத்தினார்.

இவ்விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யுமாறு நீதவான் கூறியதுடன் இந்த வழக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் பொலிசார் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.