ரஷ்யாவின் மொஸ்கோ நகரத்தில் உள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மொஸ்கோ நகரத்தில் உள்ள பாவ்லெட்ஸ்கி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள டுபினின்ஸ்காயா வீதியில்  உள்ள கட்டமொன்றிலேயே இன்று காலை மேற்படி தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

தீ விபத்தினால் உண்டான சேத விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவராத நிலையில் ஹெலிகப்டரின் உதவியுடனும் தீயை கட்டுப்படத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.