வட கொரியா தனது இரண்டு ஏவுகனை பரிசோதனைகளை கடந்த  வராங்களில் மேற்கொண்டதை அடுத்து, மீண்டு நேற்று ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அணு ஆயுத ஒப்பந்ததம் தொடர்பிலான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் இடம்பெற்றது.

இதில் அமெரிக்கா , வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்க மறுத்ததால் வடகொரியா தனது  அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.

இந்நிலையிலேயே வடகொரியா தனது மூன்றாவது ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.