தங்கம் கடத்த முயன்ற 9 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்

Published By: Daya

03 Aug, 2019 | 02:03 PM
image

சட்டவிரோதமான முறையில் தாய்லாந்திருந்து  தங்கத்தை இலங்கைக்கு கடத்திக்கொண்டு வந்த 9 இலங்கையரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது  அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப் பொதியை சோதனை செய்த போது சுமார்   3 கிலோவிற்கும் அதிகமான  தங்கங்கள் மீட்கப்பட்தாகவும் இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபா எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கடவத்தை, நிட்டம்புவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என  பொலிஸ் மேலதிக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

2025-06-15 17:43:58
news-image

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது ; ...

2025-06-15 17:56:09
news-image

ஈழத்தின் புரட்சி பாடல்கள் பலவற்றை எழுதிய...

2025-06-15 17:43:40
news-image

ஹோமாகமையில் கார் விபத்து : வயோதிபர்...

2025-06-15 17:43:03
news-image

ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில்...

2025-06-15 17:24:15
news-image

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி...

2025-06-15 17:37:46
news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01