அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது மோசடிகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து அதிபர்களை அறிவுறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வேறு மோசடிகள் இல்லாமல் சுற்றுநிரூபத்தின் பிரகாரம் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு முடியுமான அனைத்து நடடிவக்கைகளையும் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட கிளையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.