வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின்  உறுப்பினர்களுக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது