(எம்.எப்.எம்.பஸீர்)

வைத்தியர் ஷாபி விவகார விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில், குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு  அனுமதி வழங்கியுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் கோரிக்கையை ஆராய்ந்தே தேசிய பொலிஸ் ஆணைக் குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. 

அதன்படி குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் திகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சராகவும் இடமாற்றப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளிப்படுத்தின.