விபத்திற்குள்ளான காரிற்குள் ஆறு நாட்கள் சிக்கியிருந்த பெண்மணி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது.

கொரைன் பஸ்டைட் என்ற பெண்மணி பெல்ஜியத்தின் லீஜ் நகரில் காணாமல்போயுள்ளார் என அவரது குடும்பத்தினர் யூலை 23 ம் திகதி காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் காணாமல்போன பெண்மணி காட்டுப்பகுதியொன்றில் விபத்தில் சிக்கி முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தினால் நகரமுடியாத நிலையில் காருக்குள்

விபத்தில் நான் சிக்கிய இரவு முழுவதும் எனது கையடக்க தொலைபேசி அலறிக்கொண்டிருந்தது ஆனால் அதனை எடுத்து பேசுவதற்கு கூட முடியாத நிலையில் நான் காணப்பட்டேன் என உயிருடன் மீட்கப்பட்டுள்ள அந்த பெண்மணி மருத்துவமனையில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

நான் உணர்வற்ற நிலையிருந்தேன்,வலி கடுமையானதாக காணப்பட்டது,நான் எனது கைகளை அசைக்க முயன்றவேளையெல்லாம் மயக்கமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலை எனது கையடக்க தொலைபேசி செயலிழந்தது எனது ஒரு காலும் செயலிழந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

எனது கதறல்களிற்கும் பயனில்லை நான் ஆறு நாட்கள் மழைநீரை அருந்தியபடி காரிற்குள்ளேயே இருந்தேன் வெயில் மிகக்கடுமையாக காணப்பட்டது என கொரைன் பஸ்டைட் தெரிவித்துள்ளார்.

பின்னர் எனது காலால் கார்கதவை திறந்து வெளியில் வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது பிள்ளைகளை நினைத்துக்கொண்டிருந்தேன்  திங்கட்கிழமை பெண்மணியொருவர் என்னை கண்டுபிடித்தார் என கொரைன் பஸ்டைட் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்மணி என்னை தேடிவந்தார் அவர் எனது பெயரை குறிப்பிட்டு நீங்களா அது உங்களை தேடி வந்தேன் என தெரிவித்தார் என கொரைன் பஸ்டைட் தெரிவித்துள்ளார்.