‘சங்கத்தமிழன்’

Published By: Daya

02 Aug, 2019 | 02:49 PM
image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சங்க தமிழன்’. இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ், ஜோன் விஜய், சூரி, நாசர் ,ஸ்ரீமன், பொலிவூட் நடிகர்கள் அசுதோஷ் ராணா, ரவி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் சந்தர்.

வாலு, ஸ்கெட்ச் ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறாததால், இயக்குனர் விஜய் சந்தர்,‘சங்கத்தமிழன்’ படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நேற்று நிறைவடைந்தது. இதனை அவர்கள் டுவீட்டரில் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், படத்தை திட்டமிட்டபடி ஒக்டோபர் மாதம் வெளியிட படும் என்றும் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் மற்றும் சிந்துபாத் ஆகிய இரண்டு படங்களும் வணிகரீதியாக பெரிய வசூலை பெறாததால், அந்த குறையை ‘சங்கத் தமிழன்’ படம் பூர்த்தி செய்யும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right