தமிழ் கூட்­ட­மைப்பின் அர­சியல் வியா­பாரம் : மஹிந்த தரப்பு விசனம் 

Published By: J.G.Stephan

02 Aug, 2019 | 12:53 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

நம்­பிக்­கை­யில்லாப்  பிரே­ரணை, வரவு, - செலவு திட்டம் ஆகி­யவை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு ஓர்  அர­சியல்   வியா­பா­ர­மாகும்.   இவ்­வி­ட­யங்­களின் ஊடா­கவே அர­சாங்­கத்தில்  இருந்து பல வரப்­பி­ர­சா­தங்­க­ளையும், அர­சியல் தேவை­க­ளையும்  பெற்றுக் கொண்­டார்கள். ஆனால் ஒரு­போதும் தேசிய  பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் கொடுக்­க­வில்லை என  எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  காஞ்­சன  விஜ­ய­சே­கர தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­முன முன்­ன­ணியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை  இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அமைச்சர்  ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை  எதி­ர­ணி­யினர்  மீண்டும்  கொண்டு வரு­வார்­களா   என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது.   அர­சாங்கம் இன்னும்  குறு­கிய காலத்­திற்கு மாத்­தி­ரமே ஆட்­சியில் இருக்கும் இடைப்­பட்ட காலத்தில்  நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரு­வது எவ்­வித   பய­னு­மற்­றது.

எதி­ர­ணி­யினர் ஆரம்­பத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வந்த போது அப்­பி­ரே­ரணை வெற்றிப் பெறும் தரு­வா­யிலே  காணப்­பட்­டது. நெருக்­கடி நிலையில் அர­சாங்­கத்தை பாது­காப்ப வேண்­டிய தேவை  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­னக்கு  காணப்­ப­டு­வதால் அவர்கள்   கார­ணமே இன்றி அர­சாங்­கத்­திற்கு  எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்டு வந்து   அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னையும், அர­சாங்­கத்­தையும்  மிக அழ­காக பாது­காத்­தார்கள்.

அர­சாங்­கத்­திற்கும்,  அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மற்றும்  வரவு -செலவு திட்டம் ஆகி­யவை  தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு சிறந்த அர­சியல் வியா­பா­ரா­மாகும்.  வாய்ப்­புக்­களை   தமக்கு பயன்­ப­டுத்திக் கொண்டு  அர­சியல் ரீதியில் தேவை­ய­யா­ன­வற்றை   நிறை­வேற்றிக் கொண்­டார்கள். அர­சாங்­கத்தின் மத்­தியில் உள்ள  நன்­நி­லை­மை­யி­னையும், அதி­கா­ரத்­தையும் ஒரு­போதும் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக  பயன்­ப­டுத்­த­வில்லை.

தற்போ து அனைத்து தரப்­பி­னரின் நோக்­கமும் ஜனா­தி­பதி தேர்­த­லையே  மையப்­ப­டுத்தி காணப்­ப­டு­கின்­றது. பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்பாளர் உத்தியோகபூர்வமாக இம்மாதம் 11ஆம் திகதி அறிவிக்கப்படுவார்.  குண்டுத்தாக்குதலின் குற்றவாளிகளுக்கும்:, பொறுப்புக்களை தவறவிட்டவர்களுக்கும்  கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆட்சி மாற்றத்தின் பிரதான நோக்கமாக காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11