இலங்கையில் தினசரி  658 கருக்கலைப்புக்கள் இடம் பெறுவதோடு வருடமொன்றிற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 170 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக  களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறை பேராசிரியர் கே.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா என்ற தலைப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஊவா மாகாணத்திலேயே அதிகளவு கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற உடல் உறவுகளில் ஈடுப்படுவதானாலே இந்த கருக்கலைப்புக்கு காரணம் எனவும் பேராசிரியர்  இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.