மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மினி சூழல் காற்றினால் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பிரதேசத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.  

இந்த திடீர் மினி சுழற் காற்று நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் அரைமணிவரை வீசியதினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு ஒலிமடு கிராமத்தில் ஒரு வீட்டின் கூரையான சீற்றை தூக்கு வீசியுள்ளதுடன் அங்கு வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.

 

இதேவேளை நெடியமடு 6 ஆம் கட்டை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் தகரத்திலான கூரை தூக்கி வீசியுள்ளதுடன் இந்த பிரதேசங்களில் பல மரங்கள் முறிந்துள்ளதுடன் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்டவர்கள் கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்  குறிப்பிடத்தக்கது.