வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹம்பாந்தோட்டை  முதல் பொத்துவில் கடற்கரைகளில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமெனவும் அப்பகுதிகளில் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட வேண்டாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர்  காற்றுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.