(ஆர்.விதுஷா)

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அத்தியாவசிய  மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறித்த வைத்தியசாலையின் அரசாங்க  மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப  செயலாளர் வைத்தியர் சாரக கன்னங்கர தெரிவித்தார்.   

அத்துடன் இதன் காரணமாக நோயாளிகளுக்கு  உரிய  முறையில்  சிகிச்சை அளிக்க  முடியாத இக்கட்டான நிலைமை  ஏற்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்வதற்கான  நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு உடனடியக மேற்கொள்ள  வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மஹரகம புற்றுநோய்  வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.