(செ.தேன்மொழி)

களுத்துளை மாவட்ட பாணந்துறை - மத்தேன்கொட பகுதியில் வேன் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்தேன்கொட - கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தேன்கொட பகுதியில் கடந்த திங்கட்கிழமை வேன் ஒன்றை கொள்ளையடித்து சென்ற சந்தேக நபர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். 

இதன்போது சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த மற்றைய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

பொலிஸார் கைது செய்துள்ள நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் மேலுமொரு சந்தேக நபரை இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.