மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  பிரதேசத்திலுள்ள பறவைகள் சரணாலய காட்டுப்பகுதி இன்று வியாழக்கிழமை (01) பகல் தீப்பற்றி எரிந்ததையடுத்து 3 மணித்தியாத்தில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் சத்திருக்கொண்டான் பகுதியில் உள்ள குறித்த பறவைகள் சரணாலய காட்டுபகுதி பகல் 1 மணியளவில் தீபற்றி எரிவதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இதணையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு மாநகரசபை தீயணைப்பு படையினர். இராணுவத்தினர். பொலிசார் சென்று தீயை பரவவிடாமல் சுமார் 3 மணி நேரத்தில் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்