(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மானிய விலை எனக் கூறப்பட்டு படகுக்குரிய அதிகபட்ச முழுத் தொகையும் பயனாளிகளிடம் இருந்தே அரசாங்கத்தால் பெறப்படுவதாக வடமாகாண கடற்தொழிலாளர்  சங்கங்கள் தெரிவிக்கின்றன. 

மேற்படி சங்கங்கள் குறிப்பிடுகின்ற விலைக்கும், அரசாங்கம் குறிப்பிடுகின்ற விலைக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுவதற்கு வேறேதும் காரணங்கள் உண்டா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று 27/2 கேள்வி நேரத்தின்போது  விவசாய, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ, கால் நடைகள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரிடம் இந்த கேள்விகளை தொடுத்தார்.