(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம் )

அவ­ச­ர­காலச் சட்­டத்­தினால் வடக்­குக்கே அதிக நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. அவ­ச­ர­கால சட்­டத்­தினை  பயன்­ப­டுத்­தியே வடக்கில் இளை­ஞர்கள் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­ப­டு­கின்­றனர். இந்த நாட்டில் எந்த தலை­வ­ருக்கும் இதய சுத்தி இல்லை.

அனை­வரும் தமி­ழர்­களின்  இரத்தம் குடித்த ஓநாய்­கள் தான் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் சபையில் தெரி­வித்தார்.   

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்­ப­தற்­கான பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு குற்றம் அவர் சாட்­டினார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

உயிர்த்த ஞாயிறு  பயங்­க­ர­வாத தாக்­கு­தலை மையப்­ப­டுத்தி கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள இந்த அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தின் விதிகள் அத­னூ­டா­கப்­ப­யன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வாத தடைச்  சட்டம்  வடக்கு, கிழக்­கில் தான் கடு­மை­யாக நடை­முறைப்­ ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவை  மக்­களின் இயல்பு வாழ்க்­கையை பாதிக்கக் கூடி­ய­வ­கையில் உள்­ளன. இது தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான திட்­ட­மிட்ட ஒரு நட­வ­டிக்­கை­யாகும். இது மிகவும் ஆபத்­தா­னது. இன­ரீ­தி­யா­னது. குறிப்­பாக நிலங்­க­ளைப்­பறித்தல், தமி­ழர்­களின் இருப்­பி­டங்­களை இல்­லாது செய்தல், அவர்­களின் தொன்­மை­யான அடை­யா­ளங்­களை அழித்தல், வளங்­களை சூறை­யா­டுதல் போன்ற கப­ளீ­கர நட­வ­டிக்­கைகள் துல்­லி­ய­மாக இடம்­பெ­று­கின்­றன. 

அண்­மையில் கூட யாழ்ப்­பா­ணத்தில்  சில இளை­ஞர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். பலர் வெளியில் திரி­ய­மு­டி­யா­த­வாறு தடுக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த 2019-07-20 ஆம் திகதி மானிப்­பாயில் பொலி­ஸாரால் செல்­வ­ரத்­தினம் கவி கஜன் என்ற 23 வயது இளைஞன் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். ஆனால் இது­வரை சுடப்­ப­டு­வ­தற்­கான சரி­யான ஆதா­ரங்கள், ஆவ­ணங்கள் பொலி­ஸாரால் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

பொலி­ஸா­ருக்­குள்ள குற்­ற­வா­ளி­களை கைது செய்தல், நீதி­மன்றம் முன் நிறுத்­துதல் என்ற அதி­கா­ரத்தை மீறி பொது­மக்­களை சுட்­டுக்­கொல்­கின்ற சட்­டங்­களை அவர்­க­ளுக்கு வழங்­கி­யது யார்? உட­ன­டி­யா­கவே கண்ட இடங்­களில்  சுடு­கின்ற சட்­டங்­களைப் பயன்­ப­டுத்­தினால்  இன்னும் எவ்­வ­ள­வு­பேரை சுட­வேண்­டிய நிலைமை வரும்.

 

இதே பொலிஸார் தான் கன்­னியா வெந்­நீ­ரூற்று பிரச்­சி­னையில் தென்­க­யிலை ஆதீ­னத்­தையும் ஆலயக் காணிக்கு சொந்­தக்­கா­ரி­யான ரம­ணி­யம்­மா­வையும் தமது வாக­னத்தில் பேச்­சு­வார்த்­தைக்கு, ஆல­யத்தை வழி­ப­டு­வ­தற்கு அழைத்து சென்ற போது சிங்­கள காடை­யர்கள் பொலி­ஸா­ருக்கு முன்னால் சுடு­தண்­ணீர்­வீ­சினர்.  அப்­போது இந்த  பொலிஸார் ஏன் அவ­ச­ர­கால சட்­டத்தைப் பயன்­ப­டுத்­த­வில்லை? தமிழர் என்றால் எத­னையும் செய்­யலாம் என்ற நினைப்­பி­லேயே இவ்­வா­றான தாக்­கு­தல்கள், துப்­பாக்கிச் சூடுகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. 

மானிப்­பாயில் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட அந்த இளை­ஞ­னுக்கு தந்தை இல்லை. தாயார்தான் அவரை வளர்த்தார். ஒரே­ஒ­ரு­மகன். அவர் கொல்­லப்­பட்ட நிலையில் அவரின் உடலை கொண்­டு­வ­ரு­வ­தற்கு உத­வி­யாக சென்ற அய­ல­வர்­க­ளான 4 இளை­ஞர்கள் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். உட­லைப்­பொ­றுப்­பேற்­ப­தற்­காக யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற ­போது மானிப்பாய் பொலிஸ்  நிலையம் வரு­மாறு அழைத்துச் செல்­லப்­பட்டு பின்னர் இளை­ஞனின் உட­லைக்­காட்­டு­வ­தாக யாழ்ப்­பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்­லப்­பட்டே கைது செய்­யப்­பட்­டனர். பின்னர் சட்­டத்­த­ர­ணியின் தலை­யீட்­டினால் விடு­விக்­கப்­பட்­டனர். முன்னாள் போரா­ளிகள் கூட பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களில் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர்.   அவ­ச­ர­கால சட்­டத்தை மைய­மாக வைத்தே இவ்­வா­றான அபா­ய­க­ர­மான நிலைமை வடக்கில் ஏற்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை வெலிக்­கடை படு­கொ­லைக்கு தான் சாட்­சி­யாக இருப்­ப­தாக டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி. தெரி­வித்­துள்ளார். அவ­ரிடம் சாட்­சியம் பெற வேண்டும். அது மட்­டு­மல்ல செம்­மணி, அல்­லைப்­பிட்டி, மண்­கும்பான்  படு­கொ­லைகள் தொடர்­பிலும் அவ­ரிடம் சாட்­சியம் பெற­வேண்டும் ஏனெனில் அப்­ப­டு­கொ­லை­க­ளுக்கு டக்ளஸ் தேவா­னந்­தாவும் காரணம். அப்­போது அவர் இரா­ணுவ ஒட்­டுக்­கு­ழு­வாக இருந்தார் .

இந்த நாட்டில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு நீதி, சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஒரு நீதி எனற நிலையே உள்­ளது. சில  நீதி­ப­திகள் கூட நான் சிங்­க­ளவன் என்ற அடிப்படையிலேயே செயற்படுகின்றனர். நாவற்குழியில் காணாமல்போனவர்கள், படுகொலைசெய்யப் பட்டவர்கள் தொடர்பான விசாரணையிலிருந்து நீதிபதி ஒருவர் விலகியதற்கும் இதுவே காரணம்.  இந்த நாட்டில் எந்த தலைவருக்கும்  இதய சுத்தி இல்லை. அனைவரும் தமிழர்களின் இரத்தம் குடித்த ஓநாய்கள்தான் என்ன தான் வெளியில் வெள்ளைப்பூச்சு பூசினாலும் ஓநாய் ஓநாய்தான். நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் போய் யாழ்ப்பாணத்து எம்.பி.க்கள் வாகனப்   பேமிட் கேட்பதாகக் கூறியுள்ளார். இவரும் ஓநாய்தான் என்றார்.