வேகமாக வந்த வேன் ஒன்று நபர் ஒருவர் மீது மோதி விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் குறித்த வேனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு மொரட்டுவை - லுனாவ ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 45 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.