இள­மையில் கல்வி சிலையில் எழுத்து என்­பது ஆன்றோர் வாக்கு. அத்­த­கைய இளங்­கல்வி முறை­மை­யா­னது எமது நாட்டில் பல்­வேறு கட்­டங்­க­ளாக வகுக்­கப்­பட்டு மாண­வர்­க­ளுக்கு  கட்­டா­யக்­கல்வி என்ற பெயரில்  புகுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அதில்  மாண­வர்­க­ளது அடைவு மட்­டத்தைக்  கணிப்­பி­டு­வ­தற்­காக  பரீட்சை முறை­மைகள் பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு  பரீட்சை முறை­மைகள்   ஊடாக மாண­வர்­க­ளது இய­லு­மையை  அவ­தா­னித்து அவ­ர்­க­ளது  உள்­வாங்கும் திற­னுக்­கேற்ப கற்­பித்தல் நட­வ­டிக்­கை கள் பாட­சா­லை­களில் முன்­னெ­டுக்­கப் ­ப­டு­கின்­றன. 

இந்­நி­லையில் இலங்கை   கல்­வித்­ து­றையின்  இன்­றைய பேசு­பொ­ரு­ளாக ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை விவ­காரம் மாறி­யுள்­ளது. எமது நாட்டைப் பொறுத்­த­ளவில் இந்தப் பரீட்­சை­யா­னது பிள்­ளைகள்  தமக்­கு­ரிய எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­ப­தற்­கான அடித்­த­ள­மாக  அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் உண்­மை­யி­லேயே  இந்தப் பரீட்­சை­யா­னது பெற்­றோர்­க­ளது கெள­ரவ பலப்­ப­ரீட்­சை­யாக மாறி­யிருப்­ப­தென்­பதே வர­லாற்று  உண்­மை­யாகும்.

இந்தப் பரீட்சை உண்­மையில் அவ­சியம் என்­றாலும் கூட மாண­வர்­களை உள ரீதி­யாக தாக்­கக்­கூ­டி­யதும்,  கல்வி தவிர்ந்த ஏனைய திற­மை­களில் பாரிய எதிர்­வ­லை­களைத் தோற்­று­விக்கும் கூரிய ஆயு­த­மா­கவும், உள அளவில் பல­வீ­ன­மான மாணவ சமூ­கத்­துக்கு அத்­தி­வா­ர­மிடும் அடித்­த­ள­மா­கவும்  அமைந்­துள்­ளதை அடை­யா­ளப்­ப­டுத்தி  இந்தப் பரீட்­சையை தடை செய்­யு­மாறு  புத்­தி­ஜீ­வி­களும், உள­வி­ய­லா­ளர்­களும், கல்­வி­யி­ய­லா­ளர்­களும் கடந்த பல ஆண்­டு­க­ளாக  அர­சாங்­கத்­துடன் போர் தொடுத்து வந்­துள்­ளனர்.

இந்தப் பரீட்­சைக்­காக  ஒரு ­கட்­டத்தில் மாண­வர்கள் தம்மை முழு­மை­யாக கல்­விக்­காக அர்ப்­ப­ணிக்கும் அதே­வேளை  உடல், உள, ஆரோக்­கியம், ஆளுமை விருத்­திக்­கான அடிப்­படைத் திறன்­களை பெற்றுக் கொள்ள  தவ­று­கின்­றனர் என்­பதை  பெற்­றோர்கள் மறந்து விடு­கின்­றனர். ஒவ்­வொரு பிள்­ளை­யும்  கட்­டா­யத்தின் பேரில் பரீட்சை எழுதி சித்­தி ­பெற வேண்­டு­மென நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர்.  

ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக இலங்­கையில் ஆண்­டுக்கு அண்­ண­ள­வாக பரீட்சை எழுதும் 325,000 பிள்­ளை­களும் சித்­தி­ய­டை­வ­தில்லை. அதிலும் வரு­டத்­துக்கு பரீட்­சையில்  சித்­தி­ய­டை­கின்ற சுமார்  25,000 மாணவர்களே அரசாங்கததின் புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்கின்றனர்.

இப்­ப­ரீட்சை எழு­து­வ­தற்­கு­ரிய இடைப்­பட்ட காலத்தில் இம்­மா­ண­வர்கள் பல்­க­லைக்­க­ழக  பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஒப்­பாக தங்­களை இப்­ப­ரீட்­சைக்­காக அர்ப்­ப­ணிக்க வேண்­டி­யுள்­ளது. இது வெறு­மனே பரீட்­சை­யோடு நின்­று­வி­டாமல் பெறு­பே­று­க­ளுக்கு அப்பால் சக மாண­வர்கள் மத்­தியில் தனக்­கான இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் அங்­கீ­கா­ரத்­துடன்  தொடர்­பு­பட்ட பிரச்­சி­னை­யாக மாறி­ வி­டு­கின்­றது. இந்த இடத்தில் மாண­வர்­க­ளுக்கு தாழ்வு மனப்­பான்­மையும், கல்வி மீதான நாட்­ட­மின்­மையும் ஏற்­ப­டு­கின்­றது. ஒரு­வேளை பரீட்­சையில் தோல்­வியைச் சந்­திக்க நேரிட்டால்  அதனால் ஏற்­படும் உளத்­தாக்­கத்தால்  அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்து திட்­ட­மிடத் தவ­று­கின்­றனர்.  அதே­நேரம் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­தாலும் இதுவே போதும் என்ற மன­நி­லையால் முக்­கி­ய­மான பரீட்­சை­களில் அவர்­க­ளது அடைவு மட்டம் படிப்­ப­டி­யாக குறை­வ­டையத் தொடங்­கு­கி­றது.

பத்­து ­வ­யதில் பாட்­டி­யிடம் கதை கேட்டு வீட்டைச் சுற்றி நண்­பர்­க­ளோடு ஓடித் ­தி­ரிந்து சிற­க­டித்துப் பறக்க வேண்­டிய சிட்­டுகள் பரீட்சை என்ற வரை­ய­றைக்குள் வலுக்­கட்­டா­ய­மாகத் தள்ளப்படு­கின்­றனர். 

இலங்கை அர­சாங்­கத்தால் வறு­மைக்­கோட்டின் கீழ் வாழும், பின்­தள்­ளப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான உத­வி­களைப் பெற்றுக் கொடுக்கும் முக­மாக இல­வசக் கல்வி முறை­மை­யோடு 1945ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யளவில் ஆரம்­பிக்­கப்­பட்­டதே  ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சைத் திட்­ட­மாகும். 

 இந்தப் பரீட்சை மாண­வர்­க­ளுக்கு பலப் பரீட்­சை­யாக அமைந்­த­தினால் இதில் சித்­தி­ய­டையும் மாண­வர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் சிறு தொகை உத­விப்­ப­ணமும், தர­மான உயர் பாட­சா­லை­க­ளுக்குச்  சென்று கல்வி கற்­ப­தற்­கான வாய்ப்பும் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­ப­ரீட்­சை­யா­னது  ஒரு சமூக அந்­தஸ்­துக்­கான பரீட்சை என குடும்பச் சூழலால் பிள்­ளை­க­ளுக்கு ஆரம்­பத்­தி­லி­ருந்தே உர­மூட்­டப்­பட்டு விடு­வதால் பிள்­ளை­களும் அதே மன­நி­லையில் பரீட்­சைக்குத் தயா­ரா­கின்­றனர். இந்­நி­லையில் பரீட்­சையில் தோல்­வியைச் சந்­திக்கும் பட்­சத்தில்  உள அளவில் பல­வீ­ன­ம­டை­கின்­றனர். அதே­வேளை அவர்­க­ளது  அடுத்­த ­கட்ட கல்வி நட­வ­டிக்­கை­களை  ஆர்­வத்­தோடு வர­வேற்க முன்­வ­ரு­வ­தில்லை. எனவே இத்­த­கைய தாழ்வு  மன­நி­லை­யோடு அடுத்த கட்­டத்­துக்குச் செல்லும் மாண­வர்­க­ளுக்­கான மாற்று ஏற்­பா­டுகள் குறித்த கல்வி அமைச்சின் ஆர்வம் குறை­வென்றே சொல்ல வேண்டும்.

இந்­நி­லையில் காலம் கடந்து ஞானோ­த யம் கிடைத்த கதை­யாக அண்­மையில் கல்வி அமைச்­சினால் 08/2019 என்ற சுற்­ற­றிக்­கையில் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சை கட்­டா­ய­மா­ன­தல்ல என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம்  ஊட­கங்கள் வாயி­லாக உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதா­வது வறு­மைக்­கோட்டின் கீழ் வாழும் அல்­லது புல­மைப்­ப­ரிசில் உத­விகள் தேவைப்­படும் மாண­வர்கள் தவிர்ந்து ஏனைய மாண­வர்கள் இப்­ப­ரீட்­சைக்குத் தோற்ற வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தல்ல எனவும் தனது பரீட்சை அமர்வு குறித்து ஒவ்­வொரு பிள்­ளையும் தனது பெற்­றோ­ருடன் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னிக்­கலாம் எனவும் தெரி­வித்­துள்ளார். மேலும் ஆரம்பப் பிரிவை மாத்­திரம் கொண்­டுள்ள பாட­சா­லை­யொன்றில் பரீட்­சைக்கு தோற்­றாத  மாண­வர்­க­ளுக்கு  அடுத்­த ­கட்ட கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பாட­சா­லை­களைத் தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் வல­யக் ­கல்விப் பணிப்­பா­ள­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.  போட்டித் தன்­மையைத் தூண்டும் வகையில் பதா­தைகள், துண்டுப் பிர­சு­ரங்கள் வெளி­யி­டப்­ப­டக்­ கூ­டாது எனவும் வெற்றி பெறும் மாண­வர்­க­ளது புகைப்­பட பதா­தை­க­ளை காட்­சிப்ப­டுத்தவும் தடை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா கத் தெரி­வித்­தி­ருந்தார். 

கல்வி அமைச்சின் இந்தத் தீர்­மா­னத்­துக்குப் பின்னர் நடை­பெ­றப் ­போகும் முத­லா­வது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்­வரும்  4ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. நாடு முழு­வதுமிருந்து 339,369 பேர் தோற்றும் இப் ­ப­ரீட்­சையில் தமிழ் மொழி மூல­மாக 83,840 மாண­வர்­களும், சிங்­கள மொழி மூல­மாக 255,529 மாண­வர்­களும் பரீட்­சைக்கு  முகம் கொடுக்­கின்­றனர். 

கல்வி அமைச்சின் மேற்­கண்ட தீர்­மா­னத்தின் ஊடாக மாண­வர்­க­ளது  உள ரீதி­யான தாக்கம் முற்றுமுழு­தாக நீங்­குமா? என்­பதும் மேற்­கு­றித்த இந்த அறி­விப்பு வெறு­மனே கல்வி அமைச்சின்  இடைக்­கால சிந்­த­னையா? அல்­லது இதுவே இறுதித் தீர்­மா­னமா? என்­பது குறித்த தெளிவும்  இன்­னமும் பொது மக்­க­ளுக்கு வந்து சேர­வில்லை என்­பது சமூக ஆய்­வா­ளர்­க­ளது  கருத்­தாக அமைந்­துள்­ளது.  இந்­நி­லையில் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் எவ்­வித பாரிய மாற்­றங்­க­ளு­மின்றி இம்­முறை நாட­ளா­விய ரீதியில்  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்­சைக்கு  வழ­மை ­போ­லவே மாண­வர்கள் முகம் கொடுக்­க­வுள்­ளனர். ஆகஸ்டில் ஆரம்­ப­மாகும் இந்தப் பரீட்சைச் சமர் பெறு­பே­று­க­ளுக்கு பின்­ன­ரான மாண­வர்­க­ளதும் பெற்­றோர்­க­ளி­னதும் மன­நி­லையைப் பொறுத்தே கல்வி அமைச்சின் இந்தத் தீர்­மானம் சாத்­தி­யமா என்­பது தெரிய வரும். 

இந்த சுற்­ற­றிக்கை வெளி­வ­ரு­வ­தற்கு முன்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சை இனி எமது நாட்டில் நடக்­காது என அறி­வித்­தி­ருந்தார். அதன் பின்னர் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சை இனிமேல் எட்டாம் ஆண்டில் நடை­பெறும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.இவ்­விரு மாறு­பட்ட கருத்­து­க­ளுக்கும் மத்­தியில்  கல்வி அமைச்சின் ஊடாக ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை  கட்­டா­ய­மா­ன­தல்ல  என்­றொரு தீர்­மானம் முன்வைக்கப்பட்டுள்­ளது.

எனவே  ''அர­சாங்­கத்தின் நிலை­யில்­லாத இத்­த­கைய தீர்­மா­னங்கள்   எதிர்­வரும் காலங்­களில்  மாண­வர்­க­ளது கல்வி நட­வ­டிக்­கை­களில் எவ்­வித அசௌ­க­ரி­யங்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது என்­பதில் கல்வி அமைச்சும் கல்­விசார் சமூ­கமும் உறு­தி­யாக நிற்­க ­வேண்டும்''

 அதே­வேளை, விரும்­பி­ய­வர்கள் பரீட்­சைக்குத் தோற்­றலாம் என்ற இந்த நிலைப்­பாடு எந்­த­ளவு சாத்­தி­ய­மாகும் என்­பது  அடுத்­த­டுத்து நடை­பெ­ற­வுள்ள ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைகள்  ஊடா­கவே தெரி­ய­வரும். 

எனினும் இந்த அறி­வித்­தலின் ஊடாக பெரும்­பாலும்  விட­யப்­புலம் கொண்ட பெற்­றோர்கள் தமது பிள்­ளை­களை பரீட்­சைக்கு அனு­ம­திக்க மாட்­டார்கள் என்­பதே கல்வி அமைச்சின் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது.  இந்த எதிர்­பார்ப்பு எந்­த­ளவு  சாத்­தி­ய­மாகும் என்­பதும்  கேள்­விக்­கு­றியே.

 

காரணம் தர­மான உயர் பாட­சா­லை­களில் கற்கும் வரு­மானம் படைத்த பின்­புலம் உள்ள மாண­வர்­க­ளுக்கு இந்த புல­மைப் ­ப­ரிசில் தேவை­யில்லை என்­றாலும் கூட அர­சாங்­கத்தின்  “அருகில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை” எனும் திட்­டத்தின் கீழ் பெரும்­பா­லான மாண­வர்­க­ளுக்கு தாங்கள் விரும்­பிய பாட­சா­லை­களில் கல்­வியைத் தொட­ரு­வ­தற்­கான வாய்ப்பு கிடைக்­காமல் போயுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

எனவே  வச­தி­ப­டைத்த பெரும்­பா­லான பெற்­றோர் தாம் விரும்­பிய பாட­சா­லை­க­ளுக்கு பிள்­ளை­களை சேர்த்­து­விட வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்த ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை ஓர் அடித்­த­ள­மாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர் என்­பதே வெளிப்­ப­டை­யான உண்மை. 

ஆகவே  ''கல்வி அமைச்சினால் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என தீர்மானிக்கப்பட்டாலும் கூட தரமான, விருப்புக்குரிய பாடசாலைத் தெரிவுக்காக பெரும்பாலான பெற்றோர்கள் இந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை வரவேற்பார்கள் என்பதே இந்த சுற்றறிக்கை வெளிவந்த பின்னரான பலரது  கருத்தாக அமைந்துள்ளது.''

எனவே கல்வி அமைச்சின் இந்த இடைக்கால சிந்தனை எந்தளவு சாத்தியமாகும் என்பது அடுத்தடுத்த புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக் கையை அடிப்படையாகக் கொண்டே கணிப்பிட முடியும். அதேவேளை வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மாணவ சமூகத்தினர் கிடைக்கப் பெறும் அரிய வாய்ப்புகளை உரியவாறு பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதே சிறப்பானது.  எது எவ்வாறாயினும் பெற்றோர்கள் இந்தப் பரீட்சையை ஒரு கெளரவ பலப்பரீட்சையாக பார்ப்பதை  நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனித் திறமையுண்டு. எல்லோரோலும் கல்வியில் சாதிக்க முடிவதில்லை.  எனவே பிள்ளைகளது திறமைகளை இனங்கண்டு அதற்கேற்ப பயிற்சியளித்து அவர்களை ஊக்குவிப்பதே  சிறந்த பெற்றோர்களுக்கு அடையாளம்.

- நிவேதா அரிச்சந்திரன்