மொனராகலை மாவட்டத்தில் நிலவிவரும் வரட்சி காரணமாக 17,142 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரவீந்ரகுமார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஊவா மாகாணத்தில் வரட்சியினால் அதிகமாக மொனராகலை மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 17,142 குடும்பங்கள் குடி நீரின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மெதகம செயலகப் பிரிவில் 6658 குடும்பங்களும், மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் 3869 குடும்பங்களும் சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவில் 2141 குடும்பங்களும், பிபிலை பிரதேச செயலகப் பிரிவில் 2088 குடும்பங்களும், புத்தள பிரதேச செயலகப் பிரிவில் 2106 குடும்பங்களும், வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில் 945 குடும்பங்களும் படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவில் 335 குடும்பங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது இங்குள்ள மக்களுக்கு எட்டு பவுசர்கள் மூலமும் ஆறு டிரக்டர் வண்டி பவுசர்கள் மூலமும் தினமும் குடிநீரை விநியோகித்து வருவதாகவும் இவை போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இம் மாவட்டத்தில் எப்போதுமில்லாதவாறு ஆறுகளும், குளங்களும், ஓடைகளும் வற்றியுள்ள நிலையில் விவசாயிகள் தமது விவசாய நிலங்களுக்கு நீரின்றி பெரும் அசெளகரியத்திற்குள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM