இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட  காணொளி  பல்வேறு   தரப்பினரின் கவனத்திற்கு அமைய எனது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

களனி   ரஜமஹ  விகாரையின் தலைவர் என்ற  ரீதியில் குறித்த  காணொளியை     நிராகரிக்கின்றேன். இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தற்போது   நியமிக்கப்பட்டுள்ள  மூவரடங்கிய குழுவில் இவ்விடயத்தினையும் இணைத்துக் கொண்டு   விசாரணை  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  குறிப்பிட்டுள்ளார்.