சமீபத்தில் வெளிவந்த தெறி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ் மாத்திரமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

''இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடைக் காலத்தின் இறுதிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வினால் மிகவும் முடியாமல் போன நாட்களும் உண்டு. எவ்வாறாயினும் அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். 

இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. 

இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பியாக இருக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்ய  இனி வேகமாக எதையும் செய்யப்போவதில்லை. சிறிது காலத்துக்கு எந்தவொரு புதிய படத்தையும் ஏற்றுகொள்ளப் போவதில்லை '' என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.