(நா.தினுஷா)

முன்னாள் பாதுகாப்பு செய்லாளர் கோதாபய ராஜபக்ஷவின்  அமெரிக்க குடியுரிமை உண்மையில் ரத்து செய்யப்பட்டிருக்குமானால்  அதனை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியாகுவதற்காக அமெரிக்க குடியுரிமையை இழக்க முடியாது என்று அவர் எண்ணுவாராக இருந்தால் வேறொரு ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,   

உண்மையாக கோதாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிராஜா உரிமை ரத்தாகி  இருந்தால் , ஏன் அதனை ஊடகங்களில் பகிரங்கமாக அறிவிக்க மறுக்கிறார். சகல விடயங்களுக்காகவும் ஊடகங்களை நாடும் இவர்கள்  எதற்காக இந்த  விடயத்தை மாத்திரம் ஊடகங்களுக்கு அறிவிக்க மறுக்கிறார்கள். அமெரிக்க பிரஜா உரிமையை நீளக்கிக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் கோதாபய  களமிறங்க வேண்டும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.  நிச்சயமாக நாங்கள் அவரை தோற்கடிப்போம். 

இலங்கையின் ஜனாதிபதியாகுவதற்காக அமெரிக்காவின்  குடியுரிமையை இழக்க முடியாது என்று அவர் எண்ணுவாராக இருந்தால் , வேரொரு ராஜபக்ஷவுக்கு வாய்;பை வழங்க வேண்டும். தேசிய வேட்பாளர் ஒருவரே  ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிக் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகிறார். 

ஆகவே அவரும் வெளிநாட்டு வேட்பாளர் வேண்டாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.  அவர்கள் நேரடியாக கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்தையே வெளியிடுகின்றனர் என்றார்.