ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சஹ்ரானை வழிநடத்தவில்லை ; ஆதாரங்களை வெளியிட்ட ருவான் 

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 08:45 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில்  நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார். 

கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதலை நடத்தினர் என்ற ஆதாரங்கள் ஒளிப்பதிவுகள் உள்ளதெனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

இன்று அமெரிக்கா குறித்து பொய்யான குற்றங்களை சுமத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களின் ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்க பிரஜை ஒருவரையே களமிறக்கவுள்ளனர் எனவும் கூறினார். 

பாராளுமன்றத்தில் இன்று  புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பது குறித்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூருகையில். 

இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது சஹரான் மற்றும் அவரது குழுவினரால் என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இதில் சர்வதேச நபர்களின் தொடர்புகள் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறினாலும் கூட அவர்கள் இந்த தாக்குதலை நேரடியாக நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார். 

அதேபோல் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கும் மேலும் இரண்டு சம்பவங்களுக்கும் பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்துவதாக பயங்கரவாதிகள் சிலரது ஒளிப்பதிவு உரையாடல்களில் கேட்கக்கூடியதாக உள்ளது. ஆகவே ஆதாரங்களை வைத்தே நாம் இதனைக் கூறுகின்றோம், என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55