மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்ற 110  இலங்கையர்கள் மீண்டும் இன்று காலை 5.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.

மாத்தளை, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், காலி மற்றும் மட்டக்களப்பு  பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் இருவர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஊனமுற்ற நிலையில் உள்ளனர்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகள் மூலம் சவுதி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி பெண்களாக சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள் சம்பளமின்றி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில், நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.