தமிழ், முஸ்லிம்களின் ஆதரவுடன் 'தாமரை மொட்டின் ஆட்சி மலரும்!- அடித்துக் கூறும் பஸில் 

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 04:45 PM
image

"தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும்."  என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச.தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவித்துள்ளதாவது:-

"நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தரமான - தகுதியான வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இரண்டு தேர்தல்களிலும் எமது கட்சியே வெற்றி பெறும். அது இப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. 

இந்த இரண்டு தேர்தல்களிலும் சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ், முஸ்லிம் மக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அமோக ஆதரவு வழங்குவார்கள். அவர்கள், தற்போதைய ஆட்சியை வெறுத்துவிட்டார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக உள்ளார்கள். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே பேராதரவு வழங்குவார்கள். 

இனக்கலவரம், மதக்கலவரம் இன்றி மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்துவோம். 

மூவின மக்களின் அடிப்படைத் தேவைகள் உட்பட அனைத்துத் தேவைகளையும் நாம் நிறைவேற்றிக்கொடுப்போம். வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் ஓர் உறவுப்பாலத்தை நாம் ஏற்படுத்துவோம்" - என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33