சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஆறாவது மாடியில் இருந்து வீழ்ந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவன் தூங்கி கொண்டிருந்த வேளையில் சிறுவனின்  பாட்டி பொருட்கள் வாங்குவதற்து வெளியே சென்றிருந்த வேளையில் தனது பாட்டியைத் தேடும் முயற்சியில்,பால்கனியின் மேல் ஏறி விழுந்துள்ளான். இக்காட்சி வீடியோவாக பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவ வீடியோவில், ஒரு சிறுவன் ஆறாவது மாடியில் பால்கனியில் தொங்கி கொண்டிருக்கும் போது இதனை பார்த்த  குடியிருப்பாளர்கள் விரைவாக இரண்டு பெரிய போர்வைகளைப் பிடித்து சிறுவனை ஏந்த முனைகின்றனர்.

சிறுவன் தனது பிடியை இழந்து கிழே  விழுந்த  போது அதிர்ஷ்டவசமாக, போர்வையில்  விழுந்து காயங்கள் ஏதும் ஏற்படாமல் உயிர்பிழைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.