(செ.தேன்மொழி) 

ஜனாதிபதியினால் தனக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டமை  சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு குறிப்பிட்டு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டீ.பி.தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் உள்ளடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மனுதாரரான கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.