பாகிஸ்தானுக்கு 12 கோடி 50 இலட்சம் டொலர்கள் பெறுமதியான இராணுவத் தளபாட விற்பனையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்திருக்கும் தீர்மானம் இஸ்லாமாபாத் பற்றிய அவரது கொள்கை மற்றும் எண்ணத்தில் ஏற்பட்டிருக்கும் 360 பாகை திருப்பம் மாத்திரமல்ல, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புத்தனமாக நடந்துகொள்ளும் பாக்கிஸ்தானின் பல தசாப்தகாலக் கொள்கைக்கு அமெரிக்காவின் அப்பட்டமான சரணாகதியாகவும் அமைந்திருக்கிறது.

ஜனாதிபதி ட்ரம்ப் பாக்கிஸ்தானைக் கடுமையாகக் கண்டித்து விமர்சிக்கும் ஒருவராக விளங்கி வந்திருக்கின்றார். பாக்கிஸ்தான் பொய்கூறி ஏமாற்றுவதாகவும் 2002 ஆம் ஆண்டு முதல் 3300 கோடி டொலர் நிதியுதவியைப் பெற்று வந்திருக்கின்ற போதிலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரை எதிர்த்துச் சண்டையிடும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடத்தைப் பாக்கிஸ்தான் அளிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடந்த வருடம் பாக்கிஸ்தானுக்கான உதவியை ட்ரம்ப் நிர்வாகம் முடக்கியது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்காவிற்கு இஸ்லாமாபாத்திடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பைப் பெறுவதை நோக்காகக் கொண்டே இவ்வாறு செய்யப்பட்டது.

இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எதிராகப் பயங்கரவாதத்தை ஒரு வெளியுறவுக்கொள்கைக் கருவியாகப் பயன்படுத்துவதிலிருந்து தூர விலகுவதற்கு உருப்படியான காரியம் எதனையும் பாக்கிஸ்தான் செய்யாதிருக்கும் நிலையில் அந்நாட்டுக்கான இராணுவ உதவியை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அண்மைய தீர்மானம் அர்த்தமற்றதொன்றாகும்.

சர்வதேசத்திடமிருந்து தனிமைப்படும் ஆபத்தை எதிர்நோக்கிய நிலையில் இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக உலகை நம்பவைப்பதற்காக அண்மைய மாதங்களில் சில சிறிய நடவடிக்கைகளை எடுத்திருந்தது. உதாரணமாக லஷ்கர் ஈவ் தைபா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் கைதைக் கூறலாம். ஆனால் பாக்கிஸ்தான் கடந்த காலத்திலும் அவ்வாறு பல தடவை செயற்பட்டிருக்கிறது என்றாலும்ரூபவ் அவரைச் சில மாதங்களிலேயே விடுவித்து விடுகிறது.

இவையெல்லாம் மேலோட்டமானதும் அர்த்தமற்றதுமான நடவடிக்கைகள் ஆகும். இத்தகைய சூழ்நிலையில் இராணுவ உதவியைப் பாக்கிஸ்தானுக்கு மீள வழங்குகின்றமை பயங்கரவாதத்திற்கு இஸ்லாமாபாத் தொடர்ந்தும் வழங்கும் ஆதரவை வாஷிங்டன் அங்கீகரித்தது போல் அமைந்திருக்கிறது. இது பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற போருக்கு வாஷிங்டன் அரைமனதான ஆதரவையே வழங்குவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பாக்கிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை மீள வழங்கும் முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு அது தலிபானுடன் இப்போது நடத்திக்கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் காரணமாக இருந்திருக்கக்கூடும். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானில் நிலையான சமாதானமொன்றைத் தோற்றுவிக்கும் நோக்கத்தில் அல்லரூபவ் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறுவதற்கு உதவும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.

ஜனாதிபதி ட்ரம்பைப் பொறுத்தவரை அடுத்த வருடம் நவம்பரில் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னதாக அவர் தலிபான்களுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் கரிசனையுடன் இருக்கிறார். அத்தகையதொரு உடன்பாட்டிற்கு வருவதற்குப் பாக்கிஸ்தான் தலிபான்கள் மீதான அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகின்றார். அண்மையில் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ட்ரம்பும் புரிந்துணர்விற்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை மீண்டும் வழங்குவதற்குக் கைமாறாக அமெரிக்கர்களுடன் இணக்கப்பாடொன்றை எட்டுமாறு தலிபான்களைப் பாக்கிஸ்தான் நிர்பந்திக்கும். பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மீளச்  சரிசெய்வதில் இம்ரான்கானின் விவேகமான இராஜதந்திரம் வெற்றி கண்டிருக்கிறது.

இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு விசனத்திற்குரிய நிலைவரமாகும். வாஷிங்டனுக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான உடன்பாட்டின் கீழ் தரமுயர்த்தப்பட்ட எப் - 16 ஜெட் போர்விமானங்களைப் பாக்கிஸ்தான் பெற்றுக்கொள்ளும். பாலகோட் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராகப் பாக்கிஸ்தான் அதன் எப் - 16 ஜெட் போர்விமானங்களைப் பயன்படுத்தியது. இந்தியாவைச் சாந்தப்படுத்துவதற்காக இப்போது வாஷிங்டன் பாக்கிஸ்தானிலுள்ள அமெரிக்க அதிகாரிகள் எப் - 16 ஜெட் போர்விமானங்களைப் பாக்கிஸ்தான் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் கண்காணிப்பர் என்று கூறுகிறது. இது வரவேற்கக்கூடியதே என்கிற அதேவேளை பாக்கிஸ்தானுடனான இந்தியாவின் கடந்தகால அனுபவங்களும் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவத் தளபாடங்களைப் பாக்கிஸ்தான் பயன்படுத்திய முறையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இந்தியா மிகுந்த ஜாக்கிரதையாகச் செயற்பட வேண்டியிருக்கிறது. அவசரமாகச் செய்த குட்டிக்கரணம் ஆபத்தானது என்பதை வாஷிங்டனுக்கு இந்தியா விளங்க வைக்க வேண்டும். 

(டெக்கான் ஹெரால்ட்)