(எம்.மனோசித்ரா)

அடிப்படை யாப்பை ஒன்றிணைத்தல் குற்றவியல் நிதிதொகுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

ஆரம்ப காலப் பகுதியில் விதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ள குற்றவியல் நிதிதொகுப்பு சட்டத்தில் சில சொற்கள் மற்றும் பயன்பாடு 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பில் நிறைவேற்றப்பட்ட பின்னரும் இன்று பொருத்தமற்றதாக அமைந்துள்ளது. 

இவ்வாறு காலம் கடந்த சில சொற்கள் மட்டும் பயன்பாட்டிற்காக தற்போது பொருத்தமான சொற்கள் மற்றும் பயன்படுத்துவதற்கு மாற்றீடாக மேற்கொள்வதற்காக சட்ட திருத்த வரைவு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.