(ஆர்.விதுஷா)

குருணாகல் மகப்பேற்று வைத்தியர் ஷாபி  மீதான விசாரணைகளில்  நம்பகத்தன்மை இல்லை. ஆகவே, இவ்விடயம் தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தி பரந்துப்பட்ட விசாரணைகளை  முன்னெடுக்க வேண்டும் என தேசிய பிக்கு  முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் வட்டினாபஹா சோமானந்த  தேரர் வலியுறுத்தினார்.

 

வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை  அல்ல.  ஏனெனில் அவருக்கு எதிராக 615  தாய்மார்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர். 

இந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது  தொடர்பில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.