நாவற்குழி இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு : இராணுவ அதிகாரி மீதான விசாரணையை நிறுத்த முயற்சி

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 01:22 PM
image

யாழ். நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களை விசாரிப்பதற்கு யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக்கோரும் சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு விசேட அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி உயர்நீதிமன்றம்.  ஒத்திவைத்தது 

நாவற்குழி இராணுவ முகாமில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நாளை ஓகஸ்ட் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதைத் தடுக்கும் வகையில் சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றில் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரியிருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் எச்.ரி.பி. டெகிதெனியா, முரூடு எம்.பி. பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு விசேட அனுமதி மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபராக இருந்தபோது இந்த ஆள்கொணர்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றதால், இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் விலகினார். அதனால் ஏனைய நீதியரசர்கள் இருவரும் மனுவை விசாரித்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை இடைநிறுத்தி வைக்கும் வகையில் கட்டளையிட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த மேலதிக மன்றாடியார் அதிபதி சண்ஜெய் ராஜரட்ணம் உயர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.

ஆனால், மேல் நீதிமன்றின் கட்டளையை இடைநிறுத்தும் கட்டளையை வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்களான பாதிக்கப்பட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை செப்ரெம்பர் முதலாம் திகதிவரை ஒத்திவைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் உறுதியளித்தார்...

2024-06-22 22:11:18
news-image

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-06-22 22:22:37
news-image

அரசாங்கமும் எதிர்க்கட்சியிலுள்ள வேலையாற்றத் தெரியாத கட்சியும்...

2024-06-22 16:47:00
news-image

போதைப்பொருட்களுடன் 536 பேர் கைது

2024-06-22 22:12:51
news-image

இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து ;...

2024-06-22 22:21:27
news-image

தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய...

2024-06-22 16:58:15
news-image

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த கொழும்புவாசி கைது...

2024-06-22 18:26:32
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த வாழைத்தோட்டம்...

2024-06-22 16:49:56
news-image

நோயாளியின் மோதிரம், சிறுதொகைப் பணம், கைப்பை...

2024-06-22 18:49:06
news-image

திருகோணமலையை வந்தடைந்தது இந்திய கடற்படையின் கமோர்டா...

2024-06-22 22:24:50
news-image

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பயிர்கள், உடைமைகளை...

2024-06-22 16:55:38
news-image

பதுளையில் மோட்டார் சைக்கிள் விபத்து ;...

2024-06-22 16:51:52