ஐந்து உயர் தர விருதுகளை வென்ற Textured Jersey

Published By: Priyatharshan

02 Dec, 2015 | 10:45 AM
image

பிராந்தியத்தில் மிகப் பெரிய புடைவை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் உயர்தர விருதான தேசிய சிறந்த வர்த்தக விருதுகள் 2015ஐ Textured Jersey Lanka PLC (TJ) வென்றெடுத்துள்ளது. 

தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வின் போதே Textured Jersey க்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன்போது பல முன்னணி நிறுவனங்களும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TJ ஐந்து விருதுகளை வென்றதன் மூலம் தயாரிப்புத் துறையில் முதலாவது இடத்தை அடைந்துள்ளதோடு ஆடை மற்றும் தோல் தயாரிப்புப் பிரிவுகளில் சிறந்த தங்க விருதினை வென்றது இது இரண்டாவது தடவையாகும். 

சிறந்த நிறுவனம் என்ற வகையில் கொள்ளளவைக் கொண்ட நிறுவனம் என்ற பிரிவில் தங்க விருதினையும்இ செயல் திறன் மேலான்மை மற்றும் பாரிய நிறுவனம் என்ற பிரிவுகளில் வெள்ளி விருதினையும் வென்றது. இன்று நாட்டில் சிறந்த நிறுவனங்கள் மற்றும் வணிக அதிகார  அமையங்களோடு போட்டியிடும் Textured Jersey அதன் இலாக்காக்களை விரிவுபடுத்த வேண்டும்.

தேசிய சிறந்த வர்த்தக விருதுகள் 2015 நிகழ்வானது கடந்த 24ஆம் திகதி நவம்பர் மாதம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. 

இதற்கு பிரதம விருந்தினராக ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான உயர்ஸ்தானிகர் ர் H E James Dauris கலந்து கொண்டார்.

தேசிய சிறந்த வர்த்தக விருதிற்காக நிறுவனங்களை தெரிவு செய்யும் நடுவர் குழுவானது, தர மேலாண்மை ஐரோப்பிய கூட்டமைப்பு (EFQM), ஐரோப்பிய தரத்தையும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகோலான Malcolm Baldrige சிறந்த விருதுகள் முறைமைகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் இந்த தேசிய சிறந்த வர்த்தக விருது வகுக்கப்பட்டுள்ளதோடு, இந்த இரு முறைகளும் வரத்தக செயற்பாடுகளுக்கும் இலங்கைக்கு ஏற்றதா என ஆராய்ந்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெற்ற உலக புடைவைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது TJ சர்வதேச ஆடைகளுக்கான ஆண்டின் சிறந்த நிறுவனம் என்ற விருதினை வென்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுவனம் பாரிய Fabric ஆலைகளை தன்னகப்படுத்தியிருந்தது. 

கடந்த காலாண்டின் போது 66 சதவீத இலாப வளர்ச்சியை அடைந்திருந்ததாக நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் காட்டின.

Textured Jersy குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஸ்ரீயான் டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

“எமது அணியின் தொடர்ச்சியான செயற்பாட்டின் விளைவே இந்த வெற்றிக்கு காரணமாகும். அத்துடன் புதுமைகளையும் நேர்த்தியான உணர்வுகளையும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தல், கடின உழைப்பு மற்றும் முயற்சி ஆகியன நிறுவனம் மற்றுமொரு மைல்கல்லை அடைய பங்குதாரர்களுக்கு உதவியது. 

நாம் இந்த விருதினை பெற்றமை குறித்து கௌரவமடைவதோடு, தேசிய மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக கட்டியெழுப்பும் எங்கள் இலங்கை அடைய நெருங்கிச் செல்ல வேண்டும். அத்துடன் மேலும் நாம் எமது வர்த்தக செயற்பாடுகளை முன்னோக்கி தொடரந்து செல்வதற்கு எம்மை உந்துவிக்கும் வகையில் TJ க்கு விருதினை வழங்கிய தேசிய சிறந்த வர்த்தக விருது குழுவினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என அவர் தெரிவித்தார்.

TJ புடைவை கண்டுபிடிப்புக்கள் மற்றும் சர்வதேச தரத்திலான சிறந்த உற்பத்திகளைக் கொண்டுள்ளதோடு, தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக் கூடிய நிலையைப் பெறுவதோடு கடந்த பல வருடங்களாக சிறந்த மற்றும் தகைமைகள் ஆகிய விருதுகளை தேசிய மற்றும் சர்வதேசம் ஆகிய இரு பிரிவுகளிலும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டில் 4.0 பில்லியன் ரூபாவை இலாபமாகக் கொண்டிருந்ததோடு கடந்த பன்னிரண்டு மாதகாலத்திற்குள் 72.86 சதவீத பங்குவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது. குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையினால் நிறுவனத்தின் லட்சியங்களையும் அபிலாஷைகளையும் நிறுவனத்தின் நீண்டதூர பயண வளர்ச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில், தற்போது சுமார் இருபத்து மூன்று பில்லியல் சந்தை முதலீடு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் காணப்படுவதோடு, Textured Jersey Lanka க்கு முன்னணி தொழில் நிறுவனங்களான Pacific Textiles Hong Kong மற்றும் Brandix Lanka ஆகியவற்றின் ஆதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தினால் சர்வதேச தரத்திலான சிறந்த வர்த்தக நாமங்களான Marks & Spencer, Victoria’s Secret, Intimissimi, Tezenis மற்றும் Calvin Klein ஆகிய உற்பத்திகளையும் அறிமுகப்படுத்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27
news-image

இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும்...

2023-05-10 14:08:04