தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். 

ஒன்றியத்தின் தலைவர் அனந்த பாலகிட்ணர் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும்.

ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவர். அனைத்து உறுப்பினர்களும் தமது சந்தாப் பணத்தைச் செலுத்தி உறுப்புரிமையை புதுப்பித்த பின்னர் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தலைவர் அனந்த பாலகிட்ணர் கேட்டுள்ளார். 

புதிய அங்கத்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். பொதுக் கூட்டத்தில் செயலாளர் அறிக்கை, கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.