வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத வேளை பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தெய்வாதீனமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், குறித்த குடும்பத்தினர் வசிப்பதற்கும் இடமின்றி நிர்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிறிரெலோ இளைஞரணி தலைவர் ப. கார்த்தீபன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதுடன் தற்காலிக தேவைக்காக ரூபா பத்தாயிரம் பணத்தை வழங்கியிருந்தார்.

இவ் சம்பவத்தை பிரதேச செயலாளர் க.உதயராசாவிற்கு  தெரிப்படுத்தியதுடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தெரியப்படுத்தி தற்காலிக உதவியினை பெற்றுக்கொடுப்பதாக கூறியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.