(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரதானிகளான ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பெப்ரல் அமைப்பு எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளது.
மாகாண சபை தேர்தலையும், ஜனாதிபதி தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கான வழிமுறைகளை அரசாங்கத்தின் மூன்று பிரதானிகளும் முன்னெடுக்க வேண்டும். மாகாண சபை தேர்தல் திருத்தில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு விரைவான தீர்வினை பெறுவது அவசியமாகும்.
இரண்டு தேர்தல்களையும் நடத்த வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது.
மாகாண சபை தேர்தலையும், ஜனாதிபதி தேர்தலுடன் இணைத்து ஒரே நாளில் நடத்தினால் மக்களின் நிதியில் 200 கோடிசேமிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஆறு மாத காலத்திற்குள் இரண்டு பிரதான தேர்தல்களை நடத்துவது சாதாரண விடயமல்ல இருப்பினும் நாட்டு மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து செயற்படுவது நாட்டின் அபிவிருத்தினை மேலும் வலுப்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.