அரசியல் கைதியின் குடும்பத்திற்கு வீடொன்றினை கையளித்த  நாமல்

Published By: Digital Desk 4

30 Jul, 2019 | 03:04 PM
image

தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வீடு ஒன்றினை அமைத்துக்கொடுத்துள்ளார் 

 குறித்த நிகழ்வு இன்று(30) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. அரசியல் கைதியான சபரிமுத்து லோகநாதனின் குடும்ப நிலையை  சிறைச்சாலையில் வைத்து அறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குறித்த  குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை நிர்மானித்து இன்று(30) அவர்களிடம் கையளித்தார். 

குறித்த அரசியல் கைதி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். 

அந்த வகையில் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்ததோடு, கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு சென்று சந்தையின் நிலைமைகளையும் பார்வையிட்டார். 

மேலும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு  வருகின்ற சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டு இருப்பதனை  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53