பூமியைப் போலவ மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான 3 புதிய கிரகங்களை நாசா விஞ்சானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

TOI 270 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மூன்று கிரகங்கள், பூமியின் அளவை விட பெரியதாக உள்ளது தெரிய வந்துள்ளது. 

மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழத்தகுந்த அளவிற்கு இந்த மூன்று கிரகங்களிலும் தட்பவெப்பம் உள்ளது.

அத்துடன் பூமியில் இருந்து 73 ஒளி ஆண்டுகள் தொலைவில், இந்த கிரகங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து அடுத்தக்கட்ட ஆய்வுகள் நடைபெற உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.