கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று நேற்று நடந்துள்ளது.

Image result for ranil wickremesinghe and sambanthan

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்று அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளபோதும், அது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமரைச் சந்திந்துக் கலந்துரையாடியுள்ளார்.

"கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விரைவில் தரமுயர்த்தப்படும். முஸ்லிம் தரப்பினரின் இணக்கத்துக்காகவே காலம் தாமதித்தது. சபைக்கான கணக்காளர் நியமிக்கப்பட்டு முழு சபையாக இயங்க ஆவணம் செய்யப்படும்" என்று சந்திப்பில் உறுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.