இந்தியா -  உத்தரப் பிரதேசத்தில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர், தன்னைத் தீண்டிய பாம்பை பிடித்து கடித்து துண்டு துண்டாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

 உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், மது போதையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். 

இந்நிலையில்,  வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்று ராஜ்குமாரை தீண்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அவர், தன்னைத் தீண்டிய பாம்பை கையால் பிடித்து, அதை துண்டு துண்டாகக் கடித்து வீசியுள்ளார்.

அத்துடன், பாம்பு தீண்டியதில் அதன் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை,  குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த நபர்  அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.