ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் உலக டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் ஆரம்பமாகவுள்ளன.

மொத்தம் 9 அணிகள் 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்­டிகள் 2 ஆண்­டு­களில் பல்­வேறு நாடு­களில் இந்தத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.

இதில் முதல் இரண்டு இடங்­களில் வரும் அணிகள் இறுதிப் போட்­டியில் 2021 ஆம் அண்டு ஜூன் மாதம் இங்­கி­லாந்தில் மோதும். இந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் போட்­டியை ஐ.சி.சி. நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­முகம் செய்­தது. 

இலங்கை, அவுஸ்­தி­ரே­லியா, பங்­க­ளாதேஷ், இங்­கி­லாந்து, இந்­தியா, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான், தென்­னா­பி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் பல்­வேறு உள்­நாட்டு வெளி­நாட்டுத் தொடர்­களில் மொத்தம் 71 டெஸ்ட் போட்­டிகள் 2 ஆண்­டு­களில் நடை­பெ­று­கி­றது.

 

ஒவ்வொரு அணிகளும் தமது நாட்டில மூன்று டெஸ்ட் தொடர்களிலும் வெளிநாட்டில் மூன்று டெஸ்ட் தொடர்களிலும் ஆட வேண்டும். தொடரில் குறைந்து இரண்டும், கூடியது ஐந்துமாக போட்டிகளில் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதும் அணிகளுக்கு போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால் 24 புள்ளிகள் வழங்கப்படும். இரு போட்டிகளை கொண்ட தொடர்களில் ஆடும் அணிக்கு போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் வழங்கப்படும்.

இறுதிப் போட்டி சமநிலையானால் அல்லது முடிவின்றி நிறைவுற்றால் இரு அணிகளும் சம்பியன்களாக அறிவிக்கப்படும்.

போட்­டி­களை நடத்தும் அந்­தந்த நாடு­களின் சபை­களே இந்தப் போட்­டி­களை ஏற்­பாடு செய்யும். போட்டி நிர்­வா­கிகள், நடு­வர்கள் ஆகி­யோரை மட்­டுமே ஐ.சி.சி. தீர்­மா­னிக்கும். அதே போல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் விதி­மு­றை­களின் கீழ் நடை­பெ­று­வதை ஐ.சி.சி. உறுதி செய்யும். 

இந்த டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் தொடர் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடங்கி மார்ச் 31, 2021 வரை நடை­பெறும். 2ஆவது டெஸ்ட் சம்­பி­யன்ஷிப் தொடர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் 30, 2023 வரை நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இந்த உலக டெஸ்ட் சம்­பி­யன்ஷிப்பின் முலாவது டெஸ்ட் தொடராக ஆஷெஸ் டெஸ்ட் தொடரில் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.