2013 ஆம் ஆண்டு இலங்கை போக்கு வரத்து சபைக்கு புதி­தாக 2200 அசோக் லேலன்ட் பஸ் வண்­டி­களை கொள்­வ­னவு செய்த போது 286 கோடி ரூபா மோசடி இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­வித்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்­க­ம­வுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

சமூக சேவைகள் பிர­தி­ய­மைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க மற்றும் போக்குவரத்து பிர­தி­ய­மைச்சர் அசோக அபே­சிங்க ஆகி­யோரே நேற்று இந்த விவ­காரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழுவின் பணிப்­பாளர் தில்­ருக் ஷி டய­ஸிடம் எழுத்து மூலம் முறைப்­பாட்டை கைய­ளித்­துள்­ளனர்.

குறித்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2013/2014 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதி­தாக பஸ் அசோக் லேலண்ட் பஸ் வண்­டிகள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டன. உண்­மையில் இந்த பஸ் வண்டி ஒன்றின் விலை 30000 டொலர்­க­ளாகும். எனினும் அந்த ஒரு பஸ் வண்­டிக்கு தலா 5000 டொலர்கள் வீதம் இரு வேறு வரிகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி இலங்­கைக்கு வரும் போது ஒரு பஸ் வண்­டியின் பெறு­மதி 40000 டொலர்­க­ளாகும்.

எனினும் இங்கு பாரிய மோசடி ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. அதா­வது பஸ் வண்­டியின் உண்மை பெறு­ம­தி­யான 30000 டொலர் என்­பதை மறைத்து ஒரு பஸ் வண்டி 40000 டொலர் என குறிப்­பி­டப்­பட்டு அதன் பின்னர் வரிகள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி இலங்­கைக்கு வரும் போது அந்த பஸ் வண்­டியின் பெறு­மதி 50000 டொலர்­க­ளாகும். இது பாரிய மோச­டி­யாகும். ஒரு பஸ் வண்டி ஊடாக 10000 டொலர்கள் மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்கு பொறுப்பு யார்?. இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக 286 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பாரிய மோசடி தொடர்பில் விசாரணைகள் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.