(ஆர்.விதுஷா)

தனியார் வைத்தியசாலைகளை விடவும் சிறந்த மருத்துவ சேவைகள்  அரசாங்க  வைத்தியசாலைகளில் கிடைக்கின்றன.  அரசாங்க  வைத்தியசாலைகளில் தனியார்  வைத்தியசாலைகளில்இருப்பதை  விடவும் அதிநவீன  மருத்துவ இயந்திரங்களும் உபகரணங்களும்   இருக்கின்றன உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

 சுகாதார  சேவைக்கான  நியமனங்கள் வழங்கும் வைபவம் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. அதில்  பிரதமஅதிதியாக கலந்து  கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.