வளர்ந்துவரும் நவநாகரீக உலகில், யூடியூப் மூலம் அதிக வருவாயை சம்பாதித்து, சாதிப்போரின் தொகை முன்னரைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

இதில், முக்கியமாக பெரியவர்கள் தனது சமையல், தொழில்நுட்ப டிப்ஸ், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற விடயங்கள் மூலம் அனைவரையும் கட்டிப்போடும் விதத்தில் சம்பாதித்து வருகின்றனர்.


ஆனால் இங்கு புதுவிதமாக தென் கொரியாவைச் சேர்ந்த போரம் என்றும் 6 சிறுமி இரண்டு யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து அதன் மூலம் மாதம் 54 கோடி சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஆரம்பித்த இரண்டு சேனல்களிலும் குழந்தைகள் பொம்மைகள் குறித்து ரிவ்யூ செய்து வருகிறார்.

இவருடைய இரண்டு யூடியூப் சேனல்களில் சேர்த்து மொத்தம் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இதனால் இவருக்கு மாதம் 3.1 மில்லியன் டொலர் அதாவது இலங்கை மதிப்பில் ரூ 54 கோடி வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தினை வைத்து குறித்த சிறுமியின் பெற்றோர் தென்கொரிய தலைநகர் சியோலில் ஒரு ஐந்து மாடி கட்டிடத்தை விலைக்கு வாங்கியுள்ளதோடு, குறித்த கட்டடத்தின் மதிப்பு ரூபாய் 130 கோடி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் காலங்களில் குறித்த சிறுமியின் வருமானம் இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.