(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பயணிப்பதா அல்லது மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பதா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானிக்க வேண்டும் என பொதுஜன முன்னணி உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்த போதிலும் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்ட முடியவில்லை. 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்க  முன்னர் நடக்கும் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளில் கூட்டணி அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணக்கம் தெரிவிக்காது போனால் அத்துடன் பேச்சுவார்த்தைகளை கைவிட நாம் தீர்மானம் எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.