நிந்தவூரில் பயங்கரம் ! 10 மாத இரட்டைக் குழந்தைகள் சடலங்களாக மீட்பு : சுயநினைவற்ற நிலையில் தாய்

Published By: Digital Desk 3

29 Jul, 2019 | 04:26 PM
image

10 மாதம் நிரம்பிய இரட்டைக்குழந்தைகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் நிந்தவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடொன்றிலிருந்த குளியலறையொன்றிலேயே குறித்த இரு குழந்தைகளும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நிந்தவூர் 14ம் பிரிவு 153 மௌலானா வீதி  பகுதியில்  இன்று காலை வீடு ஒன்றில் குளியலறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள போதிலும்  இப்படுகொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயாரான  26 வயதுடைய சந்தேக நபர் நிஹாமுதீன் அஹமட் அமீஸா என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை  பொலிஸார் அம்பாறை தடையவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயார் மனநோயாளியாக காணப்படுவதாகவும்  நிந்தவூர் ஆதார வைத்தியாசலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிப்படுகிறது.

அத்துடன்   வீட்டில் இருந்த  குழந்தைகளின் தந்தையான   அலியார்  சியாதுல் ஹக்கிடம்  (வயது-36) விசாரணை முன்னெடுக்கப்படுகிறதுடன்  சம்பவம் இடம்பெற்ற வேளை  குறித்த இரட்டைப் பெண் குழந்தைகள் காலை தானே   கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்ததாகவும்  அறுத்த  கத்தியை அவ்விடத்தில் வைத்துவிட்டு பின்னர்  தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என கூறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37